×

`சினிமா பற்றிய விமர்சனத்தை தவிருங்கள்’ அரசியல்வாதிகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தினால் நல்லது: நடிகர் சிரஞ்சீவி அட்வைஸ்

திருமலை: அரசியல்வாதிகள் சினிமாவை பற்றி விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டால் பாராட்டை பெறுவீர்கள் என நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி பேசினார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200வது நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி பேசுகையில், ‘அரசியல்வாதிகள் தங்களது பெருமையை பேசுவதற்காக சினிமாத்துறையை விமர்சனம் செய்ய வேண்டாம்.

மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது, மாநில வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்குவது, சாலைகள் அமைப்பது, உட்கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் தான் மக்கள் பாராட்டை பெறுவீர்கள். அதை விட்டுவிட்டு சினிமாத்துறை குறித்து தேவையற்ற விமர்சனம் செய்ய வேண்டாம்’ என்றார்.

சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் நடித்து வெளியான ப்ரோ திரைப்படம் குறித்தும், நடிகர் பவன் கல்யாண் குறித்தும், அந்த படம் எடுப்பதற்கு கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டது எனவும், அதன் வருவாய் குறித்தும் ஆந்திர மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் அம்படி ராம்பாபு மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சிரஞ்சீவி பேசியுள்ளதாக சினிமாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

The post `சினிமா பற்றிய விமர்சனத்தை தவிருங்கள்’ அரசியல்வாதிகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தினால் நல்லது: நடிகர் சிரஞ்சீவி அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Chiranjeevi Advice Tirumala ,
× RELATED நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை...